உண்மைச் சரிபார்ப்பு என்கிற பெயரில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பி வருதோடு, ஜிகாதி ஆதரவாளராகவும் செயல்பட்டு வரும் Alt News இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு, குடியரசு தின விழாவில் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதை தமிழக அரசு வழங்கி இருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Alt News என்கிற ஆன்லைன் செய்திச் சேனலின் இணை இயக்குனராக இருப்பவர் முகமது ஜூபைர். இந்த செய்திச் சேனல் உண்மைச் சரிப்பார்ப்பு என்கிற பெயரில் போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை பரப்பி வருகிறது. மேலும், முகமது ஜூபைர் ஜிகாதி ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்று பரவலான குற்றச்சாட்டும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் முகமது ஜூபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, ஜூபைரின் ஆதரவாளர்கள் மேற்கண்ட விழாவின் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இதுதான் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜூபைரின் ஆதரவாளர் ஒருவர், “தமிழக அரசு உண்மைச் சரிபார்ப்பவர் மற்றும் ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜூபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கிப் பாராட்டுகிறது. வாழ்த்துக்கள்!! அனைத்துக் கட்சிகளிலும் உள்ள அனைத்து போலிச் செய்தி வியாபாரிகளுக்கும் எதிராக Alt News-ல் பக்கச்சார்பற்ற உண்மைச் சரிபார்ப்பு தொடரும் என்று நம்புகிறேன்!” என்று தெரிவித்திருக்கிறார்.
இதேபோன்ற மற்றொரு ட்வீட்டை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் (ஜே.என்.யு.) தொடர்புடைய அரவிந்த் குணசேகர் என்ற ‘பத்திரிகையாளர்’ பகிர்ந்திருக்கிறார். Alt News என்ற இணையதளம் மூலம் ஜூபைர் தனது பணிக்காக பாராட்டப்பட்டதை வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆவணத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.
அந்த ஆவணத்தில் “ஆல்ட் நியூஸ் என்ற இணையதளத்தை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார் ஜூபைர். போலிச் செய்திகளால் சமூகத்தில் வன்முறைகள் ஏற்படுவதைத் தடுக்க அவரது பணி உதவுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், “மார்ச் 2023-ல் தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்தி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையை சரிபார்த்த அவர், அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாகவும், அது உண்மையில் தமிழகத்தில் நடைபெறவில்லை என்றும் தனது இணையதளமான Alt News-ல் வெளியிட்டார். அவரது அறிக்கை, தமிழகத்திற்கு எதிரான வதந்திகளைப் பரப்புவதைத் தடுத்து நிறுத்தி, தமிழகத்தில் ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றால் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க செயல்பட்டது” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழகத்தில் பணிபுரியும் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒரு டஜனுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 2023 மார்ச் 2-ம் தேதி ஹிந்தி நாளிதழில் வெளியான கட்டுரையில், தமிழகத்தில் “தாலிபானி” பாணி தாக்குதல்களில் 15 ஹிந்தி பேசும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாகக் கூறியது. இந்த தாக்குதல்களால், தொழிலாளர்கள் மாநிலத்தை விட்டு வெளியேறினர் என்று செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த சமயத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சி, திராவிடம் உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களின் வெறுப்புப் பிரச்சாரத்தின் விளைவாக வட இந்தியர்களுக்கு எதிரான பாரபட்சமான பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியதைக் காணலாம். அதோடு, வட இந்தியர்கள் மீது வெறுப்புணர்வை பரப்புவதற்காக முன்பு ‘வடக்கன்’, ‘பானி பூரி வாலா’, ‘பண்பராக் வாயன்’ போன்ற இனவெறி வார்த்தைகள் தி.மு.க.வினரால் பயன்படுத்தப்பட்டது.
அதேபோல, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, எடப்பாடி பழனிசாமி அரசு வட இந்தியர்களுக்கு தமிழக வேலைகளை தருவதாக தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் அரசியல் விளம்பரங்களை வெளியிட்டனர். இந்தி பேசும் வட இந்தியர்கள் தமிழ் வேலைகளை எடுப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதையெல்லாம் அம்பலப்படுத்த ஜூபைர் தவறிவிட்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பொய்யான தகவல்களை பரப்பி, இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம் சமூகத்தை தூண்டிவிடுவதில் பெயர் பெற்றவர் ஜூபைர்.
தி.மு.க.வும், அதன் அமைச்சர்களும், ஆதரவாளர்களும், இந்து மதம் மற்றும் சனாதன தர்மம் குறித்து இழிவான கருத்துக்களை அடிக்கடி கூறி வருகின்றனர். தி.மு.க. தலைவர்களின் இந்துக்களுக்கு எதிரான இனப்படுகொலைக் கருத்துகள் குறித்து ஜூபைர் ‘உண்மை சரிபார்ப்பு’ கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது வேடிக்கைதான்.
ஜூபைரும், தி.மு.க. அரசும் ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவர்களாகச் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், முகமது ஜூபைரை தி.மு.க. அரசு பாராட்டியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மற்றும் ஜூபைர் ஆகியோர் இந்து மதத்திற்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள். இருவரும் இந்து மதத்தையும், சனாதன தர்மத்தையும் தங்கள் எதிரிகளாகவே பார்க்கிறார்கள்.
இந்துக்களுக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பி பிரசாரம் செய்த வரலாறு முகமது ஜூபைருக்கு உண்டு. Alt News இணை நிறுவனர்களான முகமது ஜூபைர் மற்றும் பிரதிக் சின்ஹா ஆகியோர் கடந்த காலங்களில் தவறான மற்றும் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய தகவல்களைப் பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.
குறிப்பாக, முகமது நபி பற்றி பேசியதற்காக முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி நுபுர் ஷர்மாவின் மரணத்திற்கு அழைப்பு விடுத்த கும்பலுடன் கைகோர்த்து, நாடு முழுவதும் ‘சர் தான் சே ஜூடா’ கோஷங்களின் எதிரொலியைத் தூண்டிய அறிக்கைகளின் கிளிப்பைப் பகிர்ந்தவர் ஜூபைர். இதன் காரணமாக, ஜிகாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு டெய்லர் கன்ஹையா லால் உட்பட நுபுர் ஷர்மாவை ஆதரித்த அப்பாவி இந்துக்களின் மரணத்திற்குக் காரணமானவர்.
உண்மையைச் சரிபார்ப்பவர் என்று கூறிக்கொண்டாலும், முகமது ஜூபைரோ அல்லது அவரது போர்ட்டல் Altnews-ம் நுபுர் ஷர்மா விவகாரத்தில் உண்மையைச் சரிபார்க்க ஒருபோதும் கவலைப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. உண்மைச் சரிபார்ப்புக் கவசத்தைப் பயன்படுத்தி AltNews எப்படி இஸ்லாமிய பிரச்சார இணையதளமாகச் செயல்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
மேலும், AltNews, கட்டுரைகள் அரசாங்க விரோத, இந்து விரோத போக்குகளுடன் இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அருந்ததி ராய் போன்ற இந்தியாவைத் துண்டாட விரும்பும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மேலும், AltNews இஸ்லாமியர்களின் ஊதுகுழலாக நற்பெயரைப் பெற்றுள்ளது.
உண்மைச் சரிபார்ப்பு என்றழைக்கப்படும் இணையதளம் தொடர்ந்து போலிச் செய்திகளை வெளியிடுகிறது. உண்மையை மழுங்கடிக்கிறது. இஸ்லாமியர்களை பாதுகாப்பதற்கான விவரங்களைத் தொகுக்கிறது. சில சமயங்களில் போலிச் செய்திகளை உருவாக்குகிறது.
ஆல்ட் நியூஸ் இஸ்லாமியப் பிரச்சாரத்தை நுட்பமாகச் செய்யும் அதே வேளையில், அவர்களின் பிரச்சாரத்தை ஏற்கெனவே ஏமாந்து கொண்டிருக்கும் வாசகர்களுக்கு மிகவும் சுவையாக இருக்க, உண்மைச் சரிபார்ப்பை மேற்கொள்கிறது.
இஸ்லாமியர்களின் குற்றங்களை நியாயப்படுத்தி அல்லது இந்துக்கள் மீது பொய்யாக குற்றம்சாட்டிய பல செய்திகள் உள்ளன. கடந்த ஆண்டு அலிகாரில் 3 வயது குழந்தையை கொன்ற ஜாஹித் மற்றும் அஸ்லாமின் குற்றத்தை திசைதிருப்பமுயன்றனர். இந்து ஸ்வஸ்திகா பற்றி தவறான தகவல்களை பரப்பினர்.
இலங்கையில் கொடூரமான தீவிரவாதத் தாக்குதலை நடத்திய இஸ்லாமியர்களுக்குக் கேடயமாக இருந்தனர். AltNews செய்திகளில் இஸ்லாமியர்களின் குற்றத்தை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இஸ்லாமியக் குற்றங்களை மறைப்பது, சமூக ஊடகங்களில் இந்துக்களை ஏமாற்றுவது மற்றும் உலகளாவிய ஜிஹாதிகள் மற்றும் இடதுசாரிகளுடன் ஒத்துழைப்பது வரை, AltNews இந்துக்களுக்கு எதிரான இஸ்லாமிய ஊதுகுழலாகச் செயல்பட ஒவ்வொரு தந்திரத்தையும் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.