அருணாச்சல பிரதேசத்தில் இந்திய – சீனா எல்லையில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், குடியரசு தினத்தைக் கொண்டாடினர். கையில் தேசிய கொடியுடன், “பாரத் மாதா கி ஜே” என்று முழக்கம் எழுப்பினர்.
இந்தியாவின் 75-வது குடியரசு தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் குடியரசுத் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், அருணாச்சல பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையில் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கடும் குளிரிலும் குடியரசு தினத்தை கொண்டாடினர். வெள்ளை நிற சீருடை அணிந்த வீரர்கள், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல், “பாரத் மாதா கி ஜே” என உற்சாகத்துடன் முழக்கமிட்டனர்.