மேற்கிந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது.
பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய அணி 311 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. மேற்கிந்திய அணியில் அதிகபட்சமாக கவேம் ஹாட்ஜ் 79 ரன்களும், கெவின் சின்க்ளேர் 50 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க வீரர் கவாஜா 75 ரன்கள் சேர்த்து 8 வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணியின் கவாஜா சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் பந்தில் ஆட்டமிழந்தார். சின்க்ளேர் பந்தை தூக்கி அடிக்க முயற்சித்த போது ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
நீண்ட நேரம் களத்தில் நின்ற கவாஜாவின் விக்கெட்டை அறிமுக போட்டியில் வீழ்த்தியதும் உற்சாகத்துடன் சின்க்ளேர் ஜிம்னாஸ்டிக் வீரர்களை போன்று டைவ் அடித்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார். இது குறித்து வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Kevin Sinclair takes his first Test wicket and marks the occasion with his signature celebration!
How good 🙌 #AUSvWI pic.twitter.com/xcRqgDdyIw
— 7Cricket (@7Cricket) January 26, 2024