ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த டேனியல் மெத்வதேவ், ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தகுதிபெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில் தரவரிசையில் மூன்றாம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனியல் மெத்வதேவ் மற்றும் ஆறாம் நிலை வீரரான ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர்.
இதில் இருவரும் பலம் வாய்ந்த வீரர்கள் என்பதால் இந்த போட்டி பரபரப்பாக இருந்தது. இந்தப் போட்டியில் முதல் இரு செட்டுகளை ஸ்வெரேவ் கைப்பற்றிய நிலையில், அடுத்த 2 செட்டுகளை மெத்வதேவ் கைப்பற்றினார்.
இதனால் கடைசி செட்டை யார் கைப்பற்றுவார்கள் யார் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று போட்டி பரபரப்புக்கு உள்ளானது.
இதில் கடைசி செட்டை மெத்வதேவ் எளிதில் கைப்பற்றிவிட்டார். பரபரப்பான இந்தப் போட்டியில் மெத்வதேவ் 5-7, 3-6, 7-6, 7-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை போராடி வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் மெத்வதேவ் ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரரான ஜானிக் சின்னருடன் விளையாடவுள்ளார்.