உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பருல் சவுத்ரியின் கனவை நிறைவேற்றினார்.
2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பருல் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.
தங்க பதக்கம் வென்ற பருல் சவுத்ரியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேசத்தின் துணை காவல் கண்காணிப்பாளராக நியமித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை ஆசிய விளையாட்டு போட்டியில் தங்க பதக்கம் வென்றால் உத்தரபிரதேசத்தில் DSP ரேங்கிங் வழங்கப்படும். அந்த வகையில் பருல் சவுத்ரி துணை காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற போது, “எங்கள் உ.பி.யில், டிஎஸ்பி பதவியைப் பெற தங்கப் பதக்கம் தேவை . இந்த முயற்சி எனக்கு அந்த நிலையைப் பெற்றுத்தரும் என்று நம்புகிறேன் ” என பருல் சவுத்ரி கூறியிருந்தார்.
தற்போது அவரது கனவை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமன கடிதம் வழங்கியதன் மூலம் நிறைவேற்றியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள எக்லோடா கிராமத்தைச் சேர்ந்த பருல் சவுத்ரி மும்பையில் மேற்கு ரயில்வேயில் ரயில் டிக்கெட் பரிசோதனையாளராக (டிடிஇ) பணியாற்றி வந்தார்.
Promise delivered!
Parul Chaudhary is now officially DSP, UP Police. Appointment letter handed over by CM Yogi today. https://t.co/KPLSpcgU6v
— The Uttar Pradesh Index (@theupindex) January 27, 2024