ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர், அதன் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தில் கிடைக்கும் நோய் கண்டறிதல் சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட மருத்துவமனைகளில் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சாமான்ய மக்கள் இலவச சிகிச்சை பெறும் வகையில் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர் என்ற அதன் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தில் கிடைக்கும் நோய் கண்டறிதல் சேவைகளை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆரோக்கிய மையங்களில் நோயறிதல் சேவைகளை மேம்படுத்துவதற்கு முக்கியக் காரணம், மருத்துவமனைகளில் நோயாளிகளின் சுமையைக் குறைத்து அவர்கள் எளிதில் தங்கள் பிரச்சனைகளை அறிந்துகொள்ள உதவும் என்பதே ஆகும்.
இதுகுறித்து பேசிய மூத்த அதிகாரி ஒருவர். “பல நோயாளிகள் நோயறிதல் சேவைகளைப் பெற மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள், ஒரே நேரத்தில் நிறைய பேர் வருவதால் அவர்கள் தங்கள் பிரச்சனைகளை அறிந்துகொள்ள நேரம் எடுக்கும், அதேபோல் இது மருத்துவர்களின் சுமையை அதிகரிக்கிறது.
எனவே, அவர்களுக்கு இந்த அழுத்தத்தைக் குறைத்து, அவர்களுக்கு இல்லாத வகையில் ஆரோக்யா மந்திர்களில் சிறந்த நோயறிதல் சேவைகளை வழங்குவதே இந்த திட்டம்.
நோயாளியின் நோயைப் பற்றிய ஆரம்ப ஆய்வு, முடிந்த பின்னர் அந்த நோயாளிகளை, மருத்துவர்கள் ஆரோக்கிய மந்திரில் உள்ள அறிக்கையைப் பார்த்து, எந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் அல்லது எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்று வழிகாட்டுவார்கள் ” என கூறினார்.