மார்ச் 28 வரை ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஆளில்லா விமானம் பறக்க தடை விதித்து நாக்பூர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரின் மஹால் பகுதியில் ஆர்எஸ்எஸ் தலைமையகம் உள்ளது. ஆர்எஸ்எஸ் தலைமையகம் மக்கள் தொகை அதிகம் உள்ள உணவகங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் உள்ள பகுதியில் அமைந்துள்ளது. இங்கு அடையாளம் தெரியாத நபர், ட்ரோன் வீடியோகிராஃபியைப் பயன்படுத்த முடியும், இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் நாக்பூர் காவல்துறை இங்குள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்தில் ஆளில்லா விமானம் பறக்க தடை விதித்தும், மார்ச் 28 வரை அந்த வளாகத்தில் புகைப்படம் எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் தடை விதித்து நாக்பூர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144 (1) (3) இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவில், RSS தலைமையகம் உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பயிற்சி வகுப்புகள், ஆகியவை சூழப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
இதன் காரணமாக, அங்கு செல்லும் நபர்கள் படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கலாம், ட்ரோன் வீடியோகிராஃபியைப் பயன்படுத்தலாம், இது தலைமையகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
“எனவே, அந்தப் பகுதியில் படங்கள், வீடியோக்கள், ட்ரோன் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுவோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188 (பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவு ஜனவரி 29 முதல் மார்ச் 28 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.