இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகள் வித்தியாசத்தில் யு மும்பா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று பீகாரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் விளையாடின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா 28 புள்ளிகள் பெற்றன. இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 28-28 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 50 – 34 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 40 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
தனது 16வது போட்டியில் யு மும்பா அணியை 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ் தலைவாஸ். இந்த ஒரே வெற்றியால் யு மும்பா, பெங்களுரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய மூன்று அணிகளை புள்ளிப் பட்டியலில் முந்தி ஏழாவது இடத்தை பிடித்து இருக்கிறது.
கடையில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று வந்த தமிழ் தலைவாஸ் அணி புரோ கபடி வரலாற்றிலேயே தமிழ் தலைவாஸ் அணி இதுவரை தொடர்ந்து நான்கு போட்டிகளை வென்றதில்லை.
தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் ஆறு லீக் போட்டிகள் உள்ளன. தற்போது பெரும் தன்னம்பிக்கை கொண்ட அணியாக மாறி இருக்கும் நிலையில், அடுத்த ஆறு போட்டிகளில் குறைந்தது நான்கு போட்டிகளை வென்றால் பிளே-ஆப் சுற்றுக்குச் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.