69வது ஹூண்டாய் ஃபிலிம்பேர் விருதுகள் 2024-யில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து கலந்துகொண்டார்.
69வது ஹூண்டாய் ‘ஃபிலிம்பேர் விருதுகள் 2024’ குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கன்வென்ஷன் & கண்காட்சி மையத்தில் ஜனவரி 27ஆம் தேதி தொடங்கியது.
இதில் நேற்று குஜராத்தில் பல்வேறு சினிமா பிரிவுகளுக்கான மதிப்புமிக்க விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது.
பாலிவுட் திரைத்துறையில் சிறந்து விளங்கும் திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில்னட்ப சாதனைகளை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மதிப்புமிக்க கருப்பு நிற பெண் வடிவம் கொண்ட அந்த விருது பல ஆண்டுகளாக பொழுதுபோக்கு துறையின் வெற்றியின் அடையாளமாக இருந்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த விழாவை நடிகர்களான அபர்சக்தி குரானா மற்றும் கரிஷ்மா தன்னா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.
விழாவின் தொடக்க நாள் அன்று சிறந்த ஒளிப்பதிவு, திரைக்கதை, உடைகள் மற்றும் எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
மேலும் இந்த விழாவில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டார். இதில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து கலந்துகொண்டார்.
மேலும் இந்த விழாவில் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி, நடிகை கரீனா கபூர், ஆலியா பட், கரிஷ்மா, திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நடிகர் ராஜ்குமார் ராவ் மேலும் பலர் கலந்துகொண்டனர்.