கொட்டும் பனியில் ரம்மியமாக காட்சியளிக்கும் காஷ்மீர்!
Oct 26, 2026, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொட்டும் பனியில் ரம்மியமாக காட்சியளிக்கும் காஷ்மீர்!

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. பந்திபோராவில் திரும்பும் திசையெங்கும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

காஷ்மீரின் மலை பகுதிகளில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், அதிகளவில் பனி பொழிவு இருக்கும். ஆனால், இம்முறை புதிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கியது. காஷ்மீரில் கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பந்திபோரா மாவட்டத்தில், திரும்பும் திசையெங்கும் வீடுகள், சாலைகள், வாகனங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் வெள்ளைப் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

சுற்றுலா நகரங்களான பகல்காம், குல்மார்க் மற்றும் அனந்த்நாக், சோபியான், பட்காம், குப்வாரா, ஸ்ரீநகர் என காஷ்மீரின் பெரும்பாலான மாவட்டங்களிலும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டு உள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான குளிர் வாட்டி வருகிறது. இரவு மற்றும் காலை நேரங்களில் கடுமையான பனிமூட்டமும் நிலவி வருவதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரு சிலர் சாலையோரங்களில் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.

Tags: Jammu and Kashmirjk
Share
Tweet
SendShare
Previous Post

1,000 ஆண்டுகளாகத் தொடரும் பிரச்சனை: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Next Post

69-வது ஃபிலிம்பேர் விருதுகள் 2024!

Related News

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies