அடுத்த 7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் பங்கேற்றார். விழாவில் உரையாற்றிய அவர், மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வாரத்திற்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமை திருத்த சட்ட அமலாக்கத்தை யாராலும் தடுக்க முடியாது.சிஏஏ என்பது நாட்டின் சட்டம், அதைச் செயல்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார்.
ஊடுருவலைத் தடுப்பதில் அஸ்ஸாம் பாராட்டுக்குரிய பணியைச் செய்துள்ளது. ஆனால் மேற்கு வங்கத்தில் ஊடுருவல் தொடர்கிறது. மம்மா பானர்ஜி அரசியல் ஆதாயத்திற்காக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதாகவும் அமித் ஷா கூறினார்.