டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், அவரது 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்திய விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தியவர் மகாத்மா காந்தி. இன்று மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், காந்தி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக “ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்” பாடல் ஒலிக்கப்பட்டது.
மேலும் அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.