சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
சண்டிகர் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் மனோஜ் குமார் சோன்கர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் (இண்டி கூட்டணி) சார்பாக குல்தீப் சிங் என்பவர் களமிறங்கினார்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் பதிவான 36 வாக்குகளில் மனோஜ் சோன்கர் 16 வாக்குகளைப் பெற்றார். அதே நேரத்தில் குல்தீப் சிங்கிற்கு 12 வாக்குககள் கிடைத்தன. 8 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 4 வாக்குகள் வித்தியாசத்தில் மனோஜ் குமார் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முந்தைய தேர்தலில் 35 இடங்களில் பாஜக 14 இடங்களிலும், ஆம் ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும் இருந்தனர்.