அகிலேஷ் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் போட்டி! - 16 சமாஜ்வாதி வேட்பாளர்கள் அறிவிப்பு!
Sep 9, 2025, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகிலேஷ் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் போட்டி! – 16 சமாஜ்வாதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jan 31, 2024, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்திரப் பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 11, ஆர்எல்டி கட்சிக்கு 7, சிறிய கட்சிகளுக்கு 2 தொகுதிகளை சமாஜ்வாதி ஒதுக்கி உள்ளது.

இந்த சூழலில் 16 வேட்பாளர்கள் அடங்கிய சமாஜ்வாதியின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள், மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதி சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் தொகுதியாகும். கடந்த 2022-ம் ஆண்டில் அவர் உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்ட டிம்பிள் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

அகிலேஷ் யாதவின் நெருங்கிய உறவினர் தர்மேந்திர யாதவ், பதாவுன் தொகுதி வேட்பாளராகவும், மற்றொரு உறவினர் அக்சய் யாதவ், பெரோஷாபாத் தொகுதி. வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். போஜ்புரி திரைப்பட நடிகை கஜோல் நிஷாத், கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

சம்பல் தொகுதியில் ஷபிகுர் ரஹ்மான், ஏட்டா தொகுதியில் தேவேஷ் சாக்யா, கெரி தொகுதியில் உத்கர்ஷ் வர்மா, தெளராஹ்ரா தொகுதியில் ஆனந்த், உன்னாவ் தொகுதியில் அனு தாண்டன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags: Akhilesh wife Dimple contest in Mainpuri constituency! - 16 Samajwadi candidates announced!
ShareTweetSendShare
Previous Post

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை

Next Post

பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை… கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies