தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. இதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்றது.
18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், ஜனவரி 19ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றோடு நிறைவுபெற்றுள்ளன.
இந்தப் போட்டிகள் தொடங்கிய 12 வது நாளில், தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் 38 தங்கப் பதக்கம், 20 வெள்ளிப் பதக்கம், 39 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 97 பதக்கங்களை வென்று புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 157 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. அரியானா மாநிலம் 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதங்கங்களுடன் 3 வது இடத்தை பிடித்துள்ளது.
டெல்லி, 13 தங்கம், 18 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 55 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது. 5 வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் 13 தங்கம், 17 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 47 பதக்கங்களை வென்றுள்ளது.
பதக்க பட்டியல் (முதல் 10 இடம்) :
1. மகாராஷ்டிரா – 153 பதக்கங்கள் (56 தங்கம்)
2. தமிழகம் – 97 பதக்கங்கள் (38 தங்கம் )
3. ஹரியானா – 103 பதக்கங்கள் (35 தங்கம்)
4. டெல்லி – 55 பதக்கங்கள் (13 தங்கம்)
5. ராஜஸ்தான் – 47 பதக்கங்கள் (13 தங்கம்)
6. தெலுங்கானா – 24 பதக்கங்கள் (13 தங்கம்)
7. உத்தரப்பிரதேசம் – 42 பதக்கங்கள் (11 தங்கம்)
8. பஞ்சாப் – 39 பதக்கங்கள் (11 தங்கம்)
9. கேரளா – 35 பதக்கங்கள் (11 தங்கம்)
10. மணிப்பூர் – 31 பதக்கங்கள் (10 தங்கம்)