மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் திமுக அரசியல் செய்துகொண்டிருக்கிறது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Aug 18, 2025, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் திமுக அரசியல் செய்துகொண்டிருக்கிறது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jan 31, 2024, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் எங்கெங்கு சொத்துக்கள் விலைக்கு வருகிறது என்பது மட்டும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தெரியும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

கயிலைக்குச் சென்று சிவபெருமானைத் தரிசித்த பலன், பர்வத மலையைத் தரிசித்தால் கிடைக்கும். இந்த பர்வத மலையின் அடிவாரத்தில் உள்ள காடுகள், கரிகால் சோழன் ஆயிரம் யானைகளை தன் கண் அசைவுக்கு பழக்கிய வரலாறுடையது.

மிக பிரசித்தி வாய்ந்த படவேடு ரேணுகா தேவி அம்மன் குடி கொண்டிருக்கும் தொகுதி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும், 57,004 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,81,495 வீடுகளில் குழாயில் குடிநீர், 2,80,004 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 2,03,252 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 3,58,215 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 4,07,252 விவசாயிகளுக்கு PM Kisan நிதியின் மூலமாக வருடம் 6000 ரூபாய் என இதுவரை 30,000 ரூபாய், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி 4,168 கோடி ரூபாய் என மத்திய அரசின் நலத்திட்டங்கள் பல லட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது.

தமிழகத்தில், பல அரசுப் பள்ளிகளில், வகுப்பறைகள் குறைவாக இருப்பதால், வகுப்புகள் மரத்தடிகளிலும், மேற்கூரை இல்லாத வெட்டவெளிகளிலும், ஆய்வுக் கூடங்களிலும் நடக்கிறது என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட நந்தவாடியில் அமைந்திருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில், தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைகள் உடைந்து விழுந்து மழை நேரத்தில் வகுப்பறைக்குள் தண்ணீர் விழுகிறது.

அதனால் பக்கத்தில் உள்ள வராண்டாவில் தான் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் கொண்டு வந்த PM Shri என்ற திட்டத்தின் மூலம், இந்தியாவில் 14,500 பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 18,128 கோடி ரூபாய் நமது மத்திய அரசு செலவு செய்யவுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த அரசு பள்ளிகளை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஆந்திர பிரதேச மாநிலத்தில் 662 பள்ளிகள், கர்நாடகா மாநிலத்தில் 129 பள்ளிகள், தெலங்கானா மாநிலத்தில் 543 பள்ளிகள் என அண்டை மா நிலங்கள் அனைத்தும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தும்போது, தமிழக அரசு இந்தத் திட்டத்தையே புறக்கணிக்கிறது. நமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சி பற்றியோ, எதிர்காலம் குறித்தோ திமுகவுக்கு அக்கறை இல்லை. மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தில் அரசியல் செய்துகொண்டிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலுவின் அருணை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை திறந்து வைத்தார். பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வந்து, அருணை மருத்துவ கல்லூரியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ. வேலு பணம் சம்பாதிக்க, திமுக கூட்டங்களுக்கு செலவு செய்ய, தேர்தலின் போது மக்களுக்கு காசு கொடுக்க, புதிதாக ஒரு மருத்துவ கல்லூரியை திறந்திருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆகிறது, பிரதமர் கொடுத்த மருத்துவ கல்லூரிகளுக்கு ரிப்பன் வெட்டியதை தாண்டி மு.க.ஸ்டாலின் புதியதாக ஒரு அரசு மருத்துவ கல்லூரியை கட்ட எந்த நடவடிக்கையாவது எடுத்தாரா?

திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கள் நிலங்களைக் காப்பாற்றப் போராடிய விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்த திமுக, பாஜக மற்றும் விவசாயிகள் போராட்டத்துக்குப் பிறகு குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்தது. ஆனால் அமைச்சர் எ.வ.வேலு, விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு போட்டது தெரியாது என்கிறார்.

திருவண்ணாமலையில் எங்கெங்கு சொத்துக்கள் விலைக்கு வருகிறது என்பது மட்டும் அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தெரியும்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், நாட்டின் வளர்ச்சி தொடர்வதற்கான தேர்தல், நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கான தேர்தல். எளிய மக்களுக்கான அரசியலை, ஊழலற்ற, நேர்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்லும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கரங்களை வலுப்படுத்துவோம்.

தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். திமுகவின் குடும்ப அரசியலை, ஊழல் அரசியலைப் புறக்கணிப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaien mann en makkal
ShareTweetSendShare
Previous Post

இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Next Post

ஜாக்டோ – ஜியோ போராட்டம் – முடங்கும் தமிழக அரசு?

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies