இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் இன்றைய முதல் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் தலைவாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகளும் விளையாடவுள்ளன.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றன.
பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய அணிகள் பங்குபெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டி பீகாரில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
பாட்னா பைரேட்ஸ் அணி புள்ளி பட்டியில் நான்காவது இடத்திலும், பெங்களூரு புல்ஸ் அணி ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.
இதில் பாட்னா பைரேட்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை விட பலம் வாய்ந்த அணி என்பதால் பாட்னா பைரேட்ஸ் அணியே இப்போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெறும் மற்றொரு போட்டி பீகாரில் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழ் தலைவாஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திலும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் புள்ளி பட்டியலில் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது. ஆகையால் இப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.