ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபட வாரணாசி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 7 நாட்களுக்குப் பின் பூஜைகள் நடத்திக் கொள்ளவும் இந்துக்களுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து தரப்புக்கு ஒரு பெரிய வெற்றியாக இது உள்ளது என இந்து தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின்,
ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் இந்துக்கள் வழிபடவும், ஏழு நாட்களுக்குள் பூஜை தொடங்கும் எனவும் அனைவருக்கும் பூஜை செய்ய உரிமை உண்டு” எனவும் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் 7 நாட்களுக்குள் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்,” என்று கூறினார்.
மசூதியின் அடித்தளத்தில் நான்கு பாதாள அறைகள் உள்ளன, அவற்றில் ஒன்று இங்கு வாழ்ந்த வியாஸ் குடும்பத்தின் வசம் இன்னும் உள்ளது.
பரம்பரை பூஜாரி என்பதால், பாதாள அறைக்குள் நுழைந்து பூஜையை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வியாஸ் மனு செய்திருந்தார்.
“ஏற்பாடுகள் செய்யப்பட்டவுடன், இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்யத் தொடங்குவார்கள். ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளைக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய எந்த உத்தரவும் தேவையில்லை. நாங்கள் எங்கள் சட்டப் பணிகளைச் செய்துள்ளோம். அது அறக்கட்டளை சார்ந்தது.
பிப்ரவரி 1, 1986 உத்தரவைக் குறிப்பிட்டு, ராம் மந்திரின் பூட்டை திறக்க மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே உத்தரவிட்டார், இதனை குறிப்பிட்டவர், “இன்றைய உத்தரவை பிப்ரவரி 1, 1986 உத்தரவுடன் ஒப்பிடுகிறேன். இது ஒரு வரலாற்று உத்தரவு” என்று அவர் மேலும் கூறினார்.
“மேலும் ஒரு மாநில அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இந்து பக்தர்களை அங்கு பிரார்த்தனை செய்வதைத் தடுத்துள்ளது. இன்று, நீதிமன்றம் அதை தனது பேனாவால் சரிசெய்தது. மேலும் பிரார்த்தனையை அனுமதிக்க உத்தரவு வழங்கியது” என்றார்.
அடுத்த ஏழு நாட்களில் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
“தொழுகையை நிறுத்த எழுத்துப்பூர்வ உத்தரவு இல்லை. இன்று, தொழுகை எப்படி நிறுத்தப்பட்டது என்பதைக் காட்ட எந்த அரசாங்கத்திடமிருந்தும் எந்த எழுத்துப்பூர்வ உத்தரவும் இல்லை. விரைவில் சட்ட வழக்கை முடிப்போம். வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்தார்.