இந்திய கடலோர காவல்படை 48-வது எழுச்சி நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கடலோர காவல்படை 48 வது எழுச்சி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், இந்திய கடலோர காவல்படையின் 48-வது எழுச்சி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கடற்படை வீரர்கள் அனைவருக்கும் வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடல்சார் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான அக்கறை ஆகியவற்றில் அவர்களின் அர்ப்பணிப்பு ஈடு இணையற்றது. அவர்களின் அசைக்க முடியாத விழிப்புணர்வு மற்றும் சேவைக்காக நாடு அவர்களை வணங்குகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
On the 48th raising day of @indiacoastguard, I convey my best wishes and greetings to all their personnel and staff. Their dedication to maritime safety, national security and care for the environment is unparalleled. India salutes them for their unwavering vigilance and service. pic.twitter.com/jX7jMvYe6M
— Narendra Modi (@narendramodi) February 1, 2024