அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் மிக உயர்ந்த விளம்பர திரையில் பத்ம விபூஷண் விருது வெற்ற நடிகர் சிரஞ்சீவியின் புகைப்படம் வந்துள்ளது.
இந்தியாவின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் மிகவும் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. பத்மவிபூஷண் விருது வென்ற நடிகர் சிரஞ்சீவிக்கு தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் மிக உயர்ந்த விளம்பர திரையில் பத்ம விபூஷண் விருது வெற்ற நடிகர் சிரஞ்சீவியின் புகைப்படம் வந்துள்ளது.
அந்த டைம்ஸ் சதுக்கத்தில் சிரஞ்சீவியின் புகைப்படத்திற்கு கீழே , “இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை வென்றதற்காக மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு வாழ்த்துகள் ” என்று ரசிகர்கள் மூலம் போடப்பட்டுள்ளது.
இது குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.