இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, பல இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர் இயற்கை விவசாயி செல்லம்மாள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், பாரதத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஶ்ரீ விருது பெற்ற, இயற்கை விவசாயி, அம்மா திருமதி. K. செல்லம்மாள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் பிறந்து, தெற்கு அந்தமான் தீவுகளில் வசிக்கும் அம்மா திருமதி. K. செல்லம்மாள் அவர்கள், தென்னை மற்றும் பனை மரங்களை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, முற்றிலும் இயற்கையான முறைகளைக் கண்டறிந்தவர். இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து, பல இயற்கை விவசாயிகளை உருவாக்கியவர்.
இன்றைய தினம், பாரதத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருது பெற்ற, இயற்கை விவசாயி, அம்மா திருமதி. K. செல்லம்மாள் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் பிறந்து, தெற்கு அந்தமான் தீவுகளில் வசிக்கும் அம்மா… pic.twitter.com/IxJbzjtTie
— K.Annamalai (@annamalai_k) February 1, 2024
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த ஆண்டிற்கான, பத்மஶ்ரீ விருது வழங்கி, அம்மா திருமதி. செல்லம்மாள் அவர்களுக்கு கௌரவம் சேர்த்துள்ளது நமக்கெல்லாம் பெருமை. அம்மா திருமதி. K. செல்லம்மாள் அவர்கள், மேலும் பல ஆண்டுகள் தங்கள் அரும்பணிகளைத் தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.