காசோலை மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வைத்யா எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வைத்யா. இவர், 1990 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக 4 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தற்போது இவர் விதர்பா கிரிக்கெட் கூட்டமைப்பின் கிரிக்கெட் வளர்ச்சி கமிட்டி தலைவராக வைத்யா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், காசோலை மோசடி வழக்கில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கின்படி, உள்ளூர் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து வைத்யா ஸ்டீல் வாங்கியிருக்கிறார். இதற்கான கட்டணத்தை காசோலையாக வழங்கினார். ஆனால் அந்த காசோலை , பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது.
இதனால், புதிதாக பணம் அனுப்பும்படி அந்த வர்த்தகர் வலியுறுத்தி இருக்கிறார். இதற்கு வைத்யா மறுத்து விட்டார். எனவே வியாபாரி நீதிமன்றத்தை நாடினார். அவர் நீதிமன்ற விசாரணைகளைத் தவிர்த்ததற்காக அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.