அருள்மிகு ஸ்ரீ மஹாகணபதி ஆலயம் மற்றும் ஸ்ரீ பாலமுருக பழனியாண்டவர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள, எனது சொந்த கிராமமான சூ.தொட்டம்பட்டியில், முழுமுதற் கடவுளான அருள்மிகு ஸ்ரீ மஹாகணபதி ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருக பழனியாண்டவர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
இன்றைய தினம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்தில் உள்ள, எனது சொந்த கிராமமான சூ.தொட்டம்பட்டியில், முழுமுதற் கடவுளான அருள்மிகு ஸ்ரீ மஹாகணபதி ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பாலமுருக பழனியாண்டவர் திருக்கோவில் மஹாகும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதைப் பெரும் பாக்கியமாகக்… pic.twitter.com/lDVRJpircC
— K.Annamalai (@annamalai_k) February 1, 2024
பக்தப் பெருமக்களின் நன்முயற்சியால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முறையாக ஆலயத் திருப்பணிகள் செய்யப்பட்டு, இப்புனித கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்கள் அனைவரும் நலமுடன், மகிழ்ச்சியுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இறைவனை வேண்டிக் கொண்டேன்.