மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிக அளவாக பாதுகாப்பு துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2024 2025ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.மத்திய பட்ஜெட்டில் 2024 – 25ம் நிதியாண்டில் ரயில்வே துறைக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், ரயில் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.6,331 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே பட்ஜெட்டில் அதிக அளவாக பாதுகாப்பு துறைக்கு ரூ.6.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.2.78 லட்சம் கோடியும், நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கு ரூ.2.13 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்துறைக்கு ரூ.2.03 லட்சம் கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.1.77 லட்சம் கோடி, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறைக்கு ரூ.1.68 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகவல் தொடர்புத்துறைக்கு ரூ.1.37 லட்சம் கோடியும், விவசாயம் நலத்துறைக்கு ரூ.1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.