கடலோரக் காவல்படை தினத்தையொட்டி, அனைத்துக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி, இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில், கப்பற்படைக்கு உதவும் விதமாக, கடலோரக் காவல்படை உருவாக்கப்பட்டது. கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ஆம் தேதி கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படுகிறது.
கடலோரக் காவல்படை தினத்தையொட்டி, அனைத்து கடலோர காவல்படை வீரர்களுக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்திய கடலோரக் காவல் படையின் 48-வது ஆண்டு தினத்தில், அதன் அனைத்துப் பணியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடல்சார் பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மீதான அக்கறை ஆகியவற்றில் அவர்களின் அர்ப்பணிப்பு இணையற்றது. அவர்களின் அசைக்க முடியாத விழிப்புணர்வு, சேவைக்காக இந்தியா அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது” என்று கூறியுள்ளார்.