பனி பொழிவின் காரணமாக, வெள்ளை போர்வை போர்த்திய சொர்க்கம் போல் காட்சியளிக்கும் காஷ்மீரின் அழகை பார்த்து ரசிப்பதற்காகவும், விளையாடி மகிழ்வதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
இந்தியாவில் குளிர்கால சுற்றுலா என்று வரும்போது, அதில் முக்கியமானது காஷ்மீர் தான். காரணம் காஷ்மீரின் பெரும்பாலான சுற்றுலா தலங்களில், திரும்பும் திசையெங்கும் மலைகள், வீடுகள், சாலைகள், வாகனங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும்.
இம்முறை பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது, வெண்பனி போர்த்திய சொர்க்கம் போல் காட்சியளிக்கும், காஷ்மீரின் அழகை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நாளுநாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
இளைஞர்கள் பனியில் சறுக்கியும், பல சாகசங்களை செய்தும் விளையாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை, பனி மற்றும் குளிர்சார்ந்த நிறைய விளையாட்டுகளையும், சாகசங்களையும் செய்தனர்.