ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உட்பட அனைத்து முன்னணி விமானங்களும் வாயுசக்தி பயிற்சியில் பங்கேற்கும் என விமானப்படை துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஏபி சிங் தெரிவித்துள்ளார்.
77 போர் விமானங்கள் உட்பட 130 க்கும் மேற்பட்ட விமானங்கள், வாயு சக்தி-2024 என்ற IAF பயிற்சியில் பங்கேற்க உள்ளன. இப்பயிற்சி ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உட்பட அனைத்து முன்னணி விமானங்களும் இந்திய விமானப்படையின் வாயுசக்தி பயிற்சியில் பங்கேற்கும் என்று விமானப்படை துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஏபி சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உட்பட அனைத்து முன்னணி விமானங்களும் வாயுசக்தி பயிற்சியில் பங்கேற்கும். இந்த பயிற்சியில் ராணுவ துப்பாக்கிகளையும் விமானத்தில் ஏற்றுவோம்” என்று கூறினார்.
மேலும் அவர், ” 1954 ஆம் ஆண்டு முதல் வாயுசக்தி பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் இலக்கில் துல்லியமாக குண்டுவீசி தாக்கும் திறனை IAF மேம்படுத்தும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எல்சிஏ தேஜாஸ், பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏஎல்எச் துருவ் ஆகியவை இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.
வானில் இருந்து வான் நோக்கிச் செல்லும் ஏவுகணைகளில் ரஃபேலில் இருந்து MICA ஏவுகணையும், தேஜாஸிலிருந்து R-73 ஏவுகணையும் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.