சென்னை பல்லாவரம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 6 -ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதி. இவரது மகன் ஆண்ட்ரூ, மருமகள் மெர்லின்.
இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை திருநருங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமி ரேகா என்பவரை வீட்டு வேலைக்காக இவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களது வீட்டில், அந்த சிறுமியைக் கடந்த 8 மாத காலமாக அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
இதுகுறித்து புகாரின் பேரில், சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மகன் ஆண்ட்ரூ, மருமகள் மெர்லின் ஆகியோர் மீது
காவல்துறையினர் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இருவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தங்களுக்கு ஜாமீன் கோரி, சென்னை பல்லாவரம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை பிப்ரவரி 2-ம் தேதிக்கு தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
அந்த வகையில், இன்று வாதி, பிரதிவாதி விசாரணை நடைபெற்றது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர சிறப்பு வழக்கறிஞர் எம்.சுதாகர, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், பிப்ரவரி 6-ம் தேதி ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.