இந்திய செஸ் வீராங்கனை திவ்யா குற்றசாட்டு : அமெரிக்க செஸ் வீராங்கனை திடீர் பதிவு!
Sep 10, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய செஸ் வீராங்கனை திவ்யா குற்றசாட்டு : அமெரிக்க செஸ் வீராங்கனை திடீர் பதிவு!

Web Desk by Web Desk
Feb 2, 2024, 06:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கின் போட்டியின் போது பெண்கள் எப்படி நடந்த படுகிறார்கள் என்பதை பற்றி பதிவினை வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஹங்கேரிய அமெரிக்க செஸ் வீராங்கனையான சுஷான் போல்கர் தனது அனுபவத்தை குறித்து பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜியில் நடந்தது. இதில் பங்கேற்ற இந்தியர்களில் ஒருவரான 18 வயது வீராங்கனை திவ்யா தேஷ்முக் 4.5 புள்ளிகளுடன் 12-வது இடத்தை பெற்றார்.

மராட்டியத்தை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றார். இந்த நிலையில் நெதர்லாந்து செஸ் போட்டியில் பார்வையாளர்கள் பெண் போட்டியாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து தனது வேதனை தெரிவித்திருந்தார்.

இது குறித்து திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ” செஸ் போட்டியில் வீராங்கனைகள் எப்படி பார்வையாளர்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதை சொல்ல விரும்புகிறேன்.

நெதர்லாந்து செஸ் போட்டியில் அதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இந்த தொடரில் சில போட்டிகளில் நான் சில முக்கிய நகர்வுகளை செய்ததும், போட்டி நன்றாக சென்று கொண்டிருப்பதாக நினைத்தேன். அதை நினைத்து பெருமையும் பட்டேன்.

ஆனால் பார்வையாளர்கள் அதை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக எனது உடை, முடி, எனது உச்சரிப்பு உள்ளிட்ட போட்டிக்கு தேவையில்லாத மற்ற விஷயங்களையே கவனித்தனர். இதனால் நான் மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

செஸ் போட்டியின் போது, பெண்கள் எப்படி விளையாடுகிறார்கள், அவர்களின் பலம் என்ன? என்பதை பெரும்பாலும் யாரும் கவனிப்பதில்லை என்பதே சோகமான உண்மை.

மேலும் எனது நேர்காணல்களின் போது, பார்வையாளர்கள் போட்டியை தவிர மற்ற அனைத்து விஷயங்கள் குறித்து விவாதிப்பதை பார்த்து ஏமாற்றமடைந்தேன். மிகச்சிலரே எனது ஆட்டம் குறித்து கேட்டனர்.

அதே சமயம் நேர்காணலுக்கு வீரர்கள் சென்றால், அவர்களின் தனிப்பட்ட விஷயம் குறித்து கேள்வி என்பது மிக குறைந்த அளவிலேயே இருக்கும்.

பொதுவாகவே வீராங்கனைகள் குறைவாக மதிக்கப்படுகிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். பெண்களுக்கு சரிசமமான மரியாதை கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ஹங்கேரிய – அமெரிக்க செஸ் வீராங்கனையான சுஷான் போல்கர், திவ்யா தேஷ்முக்கின் பதிவினை படித்த பின் 10 ஆண்டுகளுக்கு முன் தான் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.

Why I chose to look ugly, and the reasoning behind it!

I read what @DivyaDeshmukh05 wrote about her recent horrible experience. It is absolutely terrible. Here is an article I wrote more than a decade ago about similar things I experienced:

When I was a young chess player, I… pic.twitter.com/jVP2W5hcb4

— Susan Polgar (@SusanPolgar) January 29, 2024

அதில் , “நான் இளம் செஸ் வீராங்கனையாக இருந்த போது முடிந்தவரை அழகற்றதாக இருக்க விரும்பினேன். எனது 20 வயதுவரை நான் மேக்கப்பைத் தொடவே இல்லை. ஏன் என பெரும்பாலானோர் அறிந்திருக்கமாட்டார்கள். நான் அதைப் பற்றி பேசவில்லை. உண்மையில் 2 விஷயங்கள் இருந்தன.

ஆல் மென் செஸ் போட்டிகளில் அப்போது நான் மட்டுமே பெண். நான் அந்த நேரத்தில் ஆண்களுக்கு எதிராக மட்டுமே விளையாடுவதை நான் தேர்ந்தெடுத்ததற்காக எனது நம்பர் 1 (உலக) தரவரிசையை நீக்கி FIDE என்னை கடுமையாக தண்டித்தது.

ஆண் செஸ் வீரர்களில் நடத்தைகள் உண்மையில் பயங்கரமானது. நான் பல சமயங்களில் உயிருக்கு பயந்தேன். சிலர் என்னை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தாக்க முயன்றனர்.

நான் போட்டியில் என்னை நிரூபிக்க முயன்றேன். எனது தோற்றத்தை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலை கொள்ளவில்லை. எனது குடும்பத்தார் போட்டிகளின் போது எப்போதும் என்னுடன் இருந்து என்னைப் பாதுகாக்க முயற்சித்ததற்கு நான் நன்றியுள்ளவகாக இருந்தேன்.

இப்போது அதுபோன்ற விஷயங்கள் மாறியிருந்தாலும் அப்போது மோசமாக இருந்தது. இரண்டாவதாக நாங்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தோம். ஆடம்பரமான ஆடைகளுக்கு என்னிடம் பணம் இல்லை.

என் முழுவாழ்க்கையாவும் அர்ப்பணித்த, நான் நேசிக்கும் விளையாட்டில் உள்ள உண்மைகள் மற்றும் பிரச்சனைகளை அம்பலப்படுத்தியதற்காக நான் இன்றும் பலரால் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

Tags: chess gamechess player
ShareTweetSendShare
Previous Post

26-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம்! – திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த ஜாக்டோ – ஜியோ!

Next Post

இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் : முதல் நாள் முடிவு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies