புதுமையான யோசனைக் கொண்டு தொழில்துறையில் புதிய சாதனைகள் ஏற்படுத்தும் வகையில் புதியபுதிய திட்டங்களை செயல்படுத்துவது ஆகும். ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, அரசு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்குகின்றது.
தொழில்முனைவோர் முதல் கட்டமாக தங்களின் ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்வதால் தொழில் தொடங்குவது தொடர்பாக, டிரேட் மார்க் பதிவு, அரசு டெண்டர் நிபந்தனைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சலுகைகள் பெறுவது உள்ளிட்ட பல்வேறு அரசு உதவிகளை பெற முடியும். குறிப்பாக, வெளிநாடுகளில் நடைபெறும் கண்காட்சிக்கு செல்வது உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
தற்போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 17 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இது போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வாரி வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரும் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை வரிச்சலுகைகளை நீட்டிப்பு செய்துள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டதற்கு, பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய பா.ஜ.க அரசுக்கும் இளைஞர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.