மத்திய இடைக்கால நிதிநிலையில் நெல்லுக்கு கரும்புக்கு கோதுமைக்கு கூடுதல் விலைகள் வழங்கப்படும் என மாநில செயலாளர் பாரதீய கிசான் சங்கம் வீரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்தவர்,
பொதுவாக தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யக்கூடிய நிதிநிலை அறிக்கைகளில் மக்களின் வாக்குகளை கவர துறைவாரியாக கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்படும் புதிய வாக்குறுதிகள் இருக்கும். அது போலவே இன்றைய இடைநிலை அறிக்கை அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கை எந்த ஒரு கவர்ச்சிகரமான ஒட்டு பெரும் நோக்கத்தோடு அறிவிப்புகள் எதுவும் இல்லை.
வருமான வரி உச்ச வரம்பு வரித்தள்ளுபடி என்ற அறிவிப்புகள் இருக்கும் அது போல நெல்லுக்கு கரும்புக்கு கோதுமைக்கு கூடுதல் விலைகள் வழங்கப்படும். இந்த அறிவிப்புகள் இருக்கும் ஆனால் இது போன்ற எந்த அறிவிப்புகளும் இல்லாமல் கடந்த ஆண்டு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை நகல் போலவே இந்த அறிக்கை உள்ளது. இது இடைக்கால அறிக்கை என்பதால் ஏமாற்றம் தரக்கூடிய அல்லது வஞ்சிக்கும் அறிக்கை என்று கூற இயலாது.
புதிய ஆட்சி தரக்கூடிய புதிய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை MSPக்கு சட்ட பூர்வ அந்தஸ்து. தடையில்லா வணிகம் நடைபெறக்கூடிய வகையில் புதிய திட்டங்கள், நீர் மேலாண்மைக்கான சரியான வழிகாட்டுதல் அதாவது உரிய நேரத்தில் ஒரே இடத்தில் மழை நீரை சேமிக்க தவறியதால் பெரு வெள்ளமாக உருவெடுத்து பெருநகரங்களை புரட்டி போடக்கூடிய சூழ்நிலை உருவாகிறது தவிர்க்க புதிய திட்டங்களை தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உள்ளது எனத் தெரிவித்தார்.