பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்து வருபவர் பன்வாரிலால் புரோஹித். இந்த நிலையில், இவர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிவைத்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக, பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி அரசுக்கும், பன்வாரிலால் புரோஹித் இடையே கடும் அரசியல் மோதல் நீடித்து வந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநில ஆளுநர் பதவியை பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா செய்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழக ஆ.ளுநராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.