இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வாலின் சொந்த ஊர் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி , மேளதாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 396 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 209 ரன்களை எடுத்தார். இவர் உத்தரப்பிரதேசம் பதோஹியில் பிறந்தவர். இவரின் இரட்டை சதத்தை ஜெய்ஸ்வாலின் சொந்த ஊர் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி , மேளதாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இவர் 191 ரன்களில் இருந்த போது சோயப் பஷீருக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு அடுத்த பந்திலேயே பண்டரியையும் விளாசி தன்னுடைய முதல் இரட்டை சதத்தை அடித்தார்.
குறிப்பாக முதல் நாளிலேயே 94 ரன்களில் இருந்த போது டாம் ஹார்ட்லிக்கு எதிராக அதிரடியான சிக்சரை பறக்க விட்டு சதமடித்த அவர் தற்போது 191 ரன்களில் இருந்த போது பவுண்டரியை விளாசி இரட்டை சதமடித்துள்ளார்.
ஜாம்பவான் வீரேந்திர சேவாக் போல தயக்கமும் பயமும் இல்லாமல் சதத்தையும் இரட்டை சதத்தையும் ஒரே போட்டியில் அடித்துள்ள ஜெய்ஸ்வால் இப்போட்டியில் 19 பவுண்டரி மற்றும் 7 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இதற்கு முன் வேறு எந்த இந்திய வீரர்களும் ஒரு இன்னிங்ஸில்டி இங்கிலாந்துக்கு எதிராக 7 சிக்சர்கள் அடித்ததில்லை.
#WATCH | Uttar Pradesh | People burst crackers and distributed sweets in Bhadohi – the hometown of cricketer Yashasvi Jaiswal as he hit a double-century today in the second test match against England. pic.twitter.com/kwB68wxQcc
— ANI (@ANI) February 3, 2024