மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததாகவும், அப்போது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மக்கள் நலத்திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் அந்தமான், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழிசையும் அவரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Had fruitful discussion with Honb'le @HMOIndia Shri @AmitShah Ji in New Delhi.
Discussed welfare activities related to #Puducherry & #Telangana.గౌరవ కేంద్ర హోమ్ శాఖ మంత్రి శ్రీ అమిత్ షా గారిని కలిసి తెలంగాణ, పుదుచ్చేరి కి సంబందించిన అభివృద్ధి, సంక్షేమ కార్యక్రమాలు వివరించాను.… pic.twitter.com/2BzWeDFbhr
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) February 3, 2024