டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் முதல் நாள் முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப் 1 பிளே ஆப் சுற்றில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இந்த தொடரின் போட்டி நேற்று தொடங்கியது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே முதல் போட்டி நேற்று நடைபெற்றது.
60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானில் விளையாட உள்ளதால் இந்தப் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல் இந்திய டென்னிஸ் அணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரண்டு ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதன் முதல் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், பாகிஸ்தான் வீரர் ஐசம் அல் ஹக் குரேஷியுடன் விளையாடினார்.
இதில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 6-7, 7-6, 6-0 என்ற செட் கணக்கில் பாகிஸ்தான் வீரர் ஐசம் அல் ஹக் குரேஷியை வீழ்த்தினார்.
INDIA 1 – PAKISTAN 0
Indian No. 1 Ramkumar Ramanathan saved 2 BPs at 6-7 3-4 15-40 against Aisam Qureshi to storm back and win 6-7 7-6 6-0 to give the crucial 1-0 lead for India.
Onto Rubber 2 where Sriram Balaji will take on Aqueel Khan. pic.twitter.com/F4puBSJJch
— Indian Tennis Daily (ITD) (@IndTennisDaily) February 3, 2024
அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் என்.ஸ்ரீராம் பாலாஜி பாகிஸ்தான் வீரர் அகீல் கானுடன் விளையாடினார்.
இந்தப் போட்டியில் என்.ஸ்ரீராம் பாலாஜி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் அகீல் கானைத் தோற்கடித்தார். இதனால் குரூப் சுற்றில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் போட்டியில் , இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி, பாகிஸ்தானின் முசாமில் முர்டாஸா, பர்கத் உல்லா ஜோடியை எதிர்த்து விளையாடுகிறது.