அயோத்தி ராமர் கோவிலுக்கு காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
இதுவரை அயோத்தி ராமர் கோவிளுக்கு ரூ.11 கோடிக்கும் அதிகமாக நன்கொடை வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதேபோல் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இதுவரை ராமர் கோயிலுக்கு வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் விடுமுறை தினமான இன்றும் காலை முதலே ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று குழந்தை ராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.