ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் பேர்ல்ஸ் கிரீன் என்ற நிறுவனம். இதன் உரிமையாளர் நிர்மல்சிங் பாங்கு. நிலம் வாங்கி விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தது இந்த நிறுவனம்.
ஆண்டுக்கு 12.50% வட்டி வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்தது. அதை நம்பி, நாடு முழுவதும் 5.85 கோடி மக்கள், ரூ.49,100 கோடி முதலீடு செய்தனர். 6 கோடி பேரில் சுமார் 1 கோடி பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
மோசடி நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர்களுக்குப் பணத்தை மீட்டுத் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 8 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது.
பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கியும், சொத்துகளை விற்றும் முதலீடு செய்தவர்கள் 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணம் திரும்பக் கிடைக்காத நிலையில், மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் பி.ஏ.சி.எல் நிறுவனத்திற்குச் சொந்தமாகத் திருச்சி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் 8,198 சொத்துகள் உள்ளன.
எனவே, இந்த சொத்துக்களை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசு தூங்கி வழிவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும். செய்யுமா தமிழக அரசு?