ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
Oct 23, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Web Desk by Web Desk
Feb 4, 2024, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்க, அங்கு அமெரிக்கா போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இந்த கப்பல்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கண்டு கொள்ளாமல், கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தனர்.

இதை அடுத்து, அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டுப்படை ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சரமாரி தாக்குதலை நடத்தினர். இந்த ஒருங்கிணைந்த இராணுவ தாக்குதலில் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் ஈடுபட்டன.

இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளன. 13 இடங்களில் 36 ஹவுதி இலக்குகளைக் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags: US attack on Houthi rebels!
ShareTweetSendShare
Previous Post

வழிபாட்டு தலங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்கள் : பிரதமர் மோடி!

Next Post

“சச்சினை முந்திய ஜெய்ஸ்வால்” : முன்னாள் இந்திய வீரர் பாராட்டு!

Related News

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி?

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

வியட்நாம் : அருவியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் நபர்!

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் பொதுமக்களை ரப்பர் படகுமூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

அமெரிக்கா சமைத்துக் கொண்டே லாரியை இயக்கி கோர விபத்து – இந்தியர் கைது!

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

ரஷ்யாவில் இந்தியர் உள்ளிட்ட 17 பேர் கொலை – செல்ஃபி வீடியோ வெளியிட்ட தெலங்கானா இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies