ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
Oct 18, 2026, 11:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Feb 4, 2024, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடியை இஸ்ரேல் கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைத் தடுக்க, அங்கு அமெரிக்கா போர் கப்பல்களை நிலை நிறுத்தியுள்ளது. இந்த கப்பல்கள் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அதை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கண்டு கொள்ளாமல், கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்தனர்.

இதை அடுத்து, அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டுப்படை ஒன்றிணைந்து ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சரமாரி தாக்குதலை நடத்தினர். இந்த ஒருங்கிணைந்த இராணுவ தாக்குதலில் போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் ஈடுபட்டன.

இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளன. 13 இடங்களில் 36 ஹவுதி இலக்குகளைக் குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags: US attack on Houthi rebels!
Share
Tweet
SendShare
Previous Post

வழிபாட்டு தலங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்கள் : பிரதமர் மோடி!

Next Post

“சச்சினை முந்திய ஜெய்ஸ்வால்” : முன்னாள் இந்திய வீரர் பாராட்டு!

Related News

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies