உக்ரைன் போர்க்களத்தில் ஸ்டார்லிங்க்கின் செயல்பாடுகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவில் அதன் சேவையை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு
உக்ரைன் ராணுவப் பயன்பாட்டில் இருந்த ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்ட் செயற்கைக்கோள் இணையச் சேவைகளில் முன்னறிவிப்பின்றி வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக உக்ரைன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 14ம் தேதி மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் இயங்கும் சாதனங்களில் ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்டார்ஷீல்ட் டெர்மினல்களின் இணைய வேகம் தானாகவே குறைக்கப்படும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்தது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவை துண்டிக்கப்பட்டால் தங்களுக்கு ஏற்படக்கூடிய கடுமையான பாதிப்புகள் மற்றும் மனித இழப்புகள் குறித்து எச்சரித்துள்ளார்
உக்ரைனுக்கு ‘ஸ்டாா்லிங்க்’ கட்டணத்தைச் செலுத்தி வரும் போலந்து அரசு, எலான் மஸ்க் தனது தொழில்நுட்பத்தைக் கொண்டு அரசியல் விளையாட்டு நடத்துவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அதிவேகமாகப் பறக்கும் உக்ரைனின் இடைமறிப்பு ட்ரோன்கள் மற்றும் தாக்குதல் ட்ரோன்கள் நடுவானில் தொடர்பை இழந்து, பல முக்கிய ராணுவப் பணிகள் பாதிக்கப்பட்டன என்று உக்ரைன் அதிபரின் இராணுவத் தொழில்நுட்ப ஆலோசகர் செர்ஹி பெஸ்கிரெஸ்ட்னோவ் குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்கு உக்ரைன் இராணுவம் ஸ்டார்ஷீல்டு தொழில்நுட்பத்தையே பெரிதும் நம்பியிருந்தது. உக்ரைன் மீது அழுத்தம் கொடுக்கும் அதிபர் ட்ரம்ப் அதன் ஒரு பகுதியாக இந்த வேகக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டதாக உக்ரைன் தரப்பில் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
உக்ரைன் போர்க்களத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் இராணுவப் பதிப்பான ஸ்டார்ஷீல்டு செயற்கைக்கோள் சேவையின் வேகம் முழுமையான பயன்பாடு மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்தும் அமெரிக்க இராணுவம் மற்றும் இறுதி முடிவாக அதிபர் ட்ரம்ப் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை எலான் மஸ்க் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சீனாவில் ஸ்டார்லிங்க் சேவை தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கான உறுதியை மஸ்க்கிடமிருந்து பெறத் தவறியதைத் தொடர்ந்து, 2020-ல் சீனா தனது சொந்த 13,000 இணைய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த சர்வதேச அமைப்பில் பதிவு செய்துள்ளது.
ஸ்டார்லிங்க் பயன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் என்பதை உணர்ந்த ஐரோப்பிய யூனியன் கடந்த ஆண்டு சுமார் 2.6 பில்லியன் டாலர் மதிப்பில் பொது மற்றும் ராணுவத் தேவைகளுக்காகச் செயற்கைக்கோள் நெட்வொர்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
கடலடி இணைய கேபிள்கள் மூலம் உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள தைவான் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே, ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகிறது.
இந்தச் சூழலில் தான் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அதற்கு முகேஷ் அம்பானி தான் காரணமா ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எலான் மஸ்கின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் யாருக்காகவும் விதிகள் தளர்த்தப்படாது என உறுதிபடத் தெரிவித்துள்ளது.
உண்மையில் இந்திய சட்ட விதிகளின்படி, சாட்டிலைட் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி உள்நாட்டிலேயே தரைவழி தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு மையங்களை அமைக்க வேண்டும் என்ற விதிமுறைகளை, ஸ்டார்லிங்க் நிறுவனம் இதுவரை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை என கூறப்படுகிறது.
எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை, இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக ‘தக்ஷஷிலா இன்ஸ்டிடியூஷன்’ (Takshashila Institution) வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
சில்லறை வர்த்தகத்தில் ஸ்டார்லிங்க் பயன்பாட்டை அனுமதிப்பது, அவசர காலங்களில் நாட்டின் இணைய சேவையைக் கட்டுப்படுத்தும் அரசின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
















