நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியை எல்.முருகன் ராஜினாமா செய்தார். இந்நிலையில் ராஜினாமாவுக்குப் பிறகு முதன் முறையாக சென்னைக்கு வருகை தந்தார். அப்போது விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழகம், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்திற்காக பிரதமர் மோடி நிறைய திட்டங்களை கொடுத்துள்ளதாக தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒரு தொண்டனாக கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.
















