அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உதவியாளரான இஸ்லாமியர், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் சென்றதால் பரபரப்பு நிலவியது.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 24-ம் தேதி மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. தீப தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அண்ணாமலையார் கோயிலில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளரான இஸ்லாமியர், மத அடையாளமான தொப்பியுடன் கோயிலுக்குள் வலம் வந்ததால் பரபரப்பு நிலவியது. இதனிடையே, ஆய்வின்போது செய்தியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், மாற்று மதத்தை சேர்ந்த நபரை எப்படி உள்ளே அழைத்துச் செல்லலாம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
















