மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே தனியார் கப்பலில் இருந்து கடலில் விழுந்த நபரை, கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள கடற்கரைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். சிலர் தனியார் கப்பலில் பயணம் செய்வர்.
இந்நிலையில், மும்பை அருகே தனியார் படகு McGregor இல் இருந்து ஒருவர் திடீரென கடலில் விழுந்தார். இது குறித்து கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சி439 கப்பலில் விரைந்து வந்த இந்திய கடலோர காவல்படை வீரர்கள், கடலில் விழுந்தவரை மீட்க போராடினர். இரவு நேரம் என்பதால், அவரை மீட்பதற்கு தாமதம் ஆனது. பின்னர், அவரை பத்திரமாக மீட்டு, கப்பலுக்கு அழைத்து சென்றனர். அந்த நபர் ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
இந்திய கடலோர காவல்படை தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறது. கப்பற்படைக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.