பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது ஒரு சில திட்டங்களோடு நின்றுவிடாமல், நாட்டின் வளர்ச்சிக் கதையின் இதயமாக பின்னிப் பிணைந்துள்ளது என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுள்ளார். இது வளர்ச்சியடைந்த பாரதம் என்ற உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் சமூக ஊடக எக்ஸ் தளத்தின் பதிவைப் பகிர்ந்து, பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“எங்கள் அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது.
महिला नेतृत्व में विकास को लेकर हमारी सरकार प्रतिबद्ध है। 'विकसित भारत' के संकल्प में देश की नारीशक्ति का बहुमूल्य योगदान होने जा रहा है। @smritiirani जी ने अपने आलेख में इसी भावना को प्रकट किया है। https://t.co/bf1OpTYxzk
— PMO India (@PMOIndia) February 5, 2024
‘வளர்ச்சியைடைந்த இந்தியா’ என்ற உறுதிப்பாட்டில் நாட்டின் மகளிர் சக்தி மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கவிருக்கிறது. ஸ்மிருதி இரானி தனது கட்டுரையில் இந்த உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.