எல்லா மந்திரிகளுக்கும் எல்லா திமுக தொடர்புடைய ஊழலுக்கும் தலைமை கூட்டாளி மு.க.ஸ்டாலின்தான் எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
தண்ணீரில் மூழ்குகிறவன் காப்பாற்ற வருகின்றவனையும் கூடவே இழுத்துக்கொண்டு மூழ்கிப்போவார்கள் என்று சொல்வதுண்டு!
மூழ்குகிற ”ஒருவன்” கையை பிடித்தாலே இந்த நிலை என்றால் மூழ்குகிற ”இரண்டுபேர்” ஒருவனை பிடித்துக்கொண்டால் என்ன ஆகும்? கைகொடுக்கும் இவனோ தனியாக இல்லை! குடும்பத்தோடு இருக்கிறான்! இவன் குடும்பமே மூழ்கிவிடும் என்பதுதான் உண்மை!
செந்தில் பாலாஜியும் பொன்முடியும் மூழ்குகிறார்கள்! காப்பாற்ற கை கொடுத்திருப்பது மு.க.ஸ்டாலின்! ஸ்டாலின் பிடியில் அவர் குடும்பம்! துர்கா ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், உதயநிதி, கனிமொழி, தயாநிதி இப்படி பட்டியல் நீழுகிறது! குடும்பத்தார் பெயரில் சொத்துவாங்க முதலீடு செய்யத்தான் ஸ்டாலின் குடும்பத்தோடு, ”அரசுக்கு முதலீடு” என சொல்லிக்கொண்டு வெளிநாடுகளில் அலைவதாக சொல்லப்படுகிறது! அத்தனை பணமும் ஊழல் பணமே! மனைவி பெயரில் முதலீடு செய்த பொன்முடி, மனைவியோடு ஜெயிலுக்கு போவதுபோல், ஸ்டாலினும் குடும்பத்தோடு ஜெயிலுக்கு போவார் என்பதுதான் எதார்த்தம்!
நீங்கள் தவறுதலாக, ஸ்டாலினை, ”பிறருக்கு உதவுகிறவர்” ”மூழ்குகிறவர்களுக்கு கைக்கொடுப்பவர்”, என்று நினைத்து விடாதீர்கள்! இவரை அவர்கள் காட்டிக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவர் கை கொடுப்பதுபோல் நடிக்கிறார்! மாட்டிக்கொள்ளும் மந்திரிகள் தங்களின் ஊழல் தலைவரை காட்டிக்கொடுப்பார்கள் என்று சமுதாயம் நம்புகிறது! எல்லா மந்திரிகளுக்கும் எல்லா திமுக தொடர்புடைய ஊழலுக்கும் தலைமை கூட்டாளி மு.க.ஸ்டாலின்தான்!
பலமுறை கீழமை நீதிமன்றத்தில் முயன்றும் ஜாமீன் கிடைக்காத செந்தில் பாலாஜி சார்பில் உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக 31-1-2024 அன்று ஜாமீன் மனு வந்தது! மனுவை பரிசீலித்த நீதிபதி ஆனந்த்வெங்கடேசன் அவர்கள்,”இந்த வழக்கில் 230 நாட்களுக்கு மேல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு, ”அவர் அமைச்சராக நீடிப்பது, ஏன்?” என கேள்வி கேட்டிருந்தார்களே” என சுட்டிக்காட்டினார்!.
மேலும், கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஏன்? அப்படி அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்!
தலைமறைவாக இருப்பதை காரணம் காட்டி ஜாமீன் மறுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது, என செந்தில்பாலாஜியின் தம்பியும் நிழல் மந்திரியாக செயல்பட்டவருமான அசோக்கை ரகசியமாக கைதுசெய்து வைத்திருக்கும் திமுகவின் வழக்கறிஞர் நீதிபதியிடம் முறையிட்டார்!
ஜாமீன் மறுத்த நீதிபதி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கை பிப்ரவரி 14 க்கு ஒத்தி வைத்தார்!
அரசு ஊழியர்கள் நீண்டநாள் விடுப்பு எடுத்தாலே ஊதியம் இல்லாத விடுப்பினைத்தான் அரசாங்கம் வழங்கும்! ஆனால் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சர் வேலையில் வைத்திருந்து சம்பளமும் லட்சக்கணக்கில் கொடுக்கிறது திமுக அரசு!
ஊழல் செய்ததில் செந்தில்பாலாஜியும் அவர்தம்பி அசோக்கும் வேலையாட்கள்தான், உண்மையான ஊழல்முதலாளி மு.க.ஸ்டாலின்தான் என்னும் உண்மை ஊருக்கே தெரியுமே! நீதிமன்றத்திற்கு தெரியாதா என்ன?
ஸ்டாலின் குடும்பத்தை இழுத்துக்கொண்டு மூழ்கப்போகும் ”ஒருவரை” விமர்சனம் செய்து விட்டோம், இனி ”அடுத்தவரை” பார்ப்போம்!
மகாபாரதத்தில் மனைவியை வைத்து சூதாடியது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது! இங்கே திமுகவினர் மனைவியையும் விட்டுவைக்காமல் அவர்கள் பெயர்களிலும் வாங்கி குவிக்கிறார்களே!
சரி, ஸ்டாலின் 2021 ம் ஆட்டத்தில் முதல் விக்கெட் அவுட் செந்தில் பாலாஜி! இரண்டாவது அவுட் விக்கெட் பொன்முடி!
22-1-2024 மிக மிக நல்ல நாள்! ராமச்சந்திர மூர்த்தி அனைத்து உலகத்தோர் மனங்களிலும், அயோத்தியில் தனது வீட்டிலும் மீண்டும் வருகை தந்த நாள்தான் அது! அந்த புனிதநாள்தான் பொன்முடி குடும்பத்திற்கு நீதிபதி குறித்த நாள்! ஜனவரி 22 ம் நாள் ”தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை” தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்தில் ஆஜராகி, பொன்முடி ஜெயிலுக்கு போக தயாராகி நீதிமன்றத்திற்கு வராததை சுட்டிக்காட்டி, காவல்துறை உதவியோடு அவரையும் அவர் மனைவியையும் பிடித்துவந்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, ஜெயிலில் தள்ளியிருக்க வேண்டும்!
அது நடக்காதது ஏன்? என்னும் கேள்வியை பொதுமக்களும், பத்திரிக்கையினரும் கேட்டுவந்த சூழலில், 29-1-2024 அன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை தள்ளிவைக்கக்கோரிய பொன்முடியின் மனு வந்தது!
”தீர்ப்பை தள்ளிவைக்க முடியாது”, என தீர்ப்பளித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி!
மார்ச் 4 ம் தேதிக்குள் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவேண்டும் என்றார் உச்ச நீதிமன்ற நீதிபதி!
இன்னேரம் பொன்முடியும் ஊழல் பணத்தில் சொத்துவாங்கிய அவரது மனைவியும் ஜெயிலில் இருக்கவேண்டும்! தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் முறையிட்டு அவர்களை உள்ளே தள்ளியிருக்க வேண்டும்! ஏன் செய்யவில்லை? முதலமைச்சர் ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிவாளம் போட்டுள்ளாரா? பொன்முடி உள்ளே போனால் ஸ்டாலினை போட்டுக்கொடுத்து விடுவாரா?
”ஜனவரி 22-ம் தேதிக்குள் சரணடையாவிட்டால் இருவரையும் சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”- என்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது!
எனினும் தமிழக ஊழல் ஒழிப்புத்துறையை தமிழக அரசு செயல்படவிடாமல் தடுத்து வைத்துள்ளது!
செந்தில்பாலாஜி செய்தகுற்றம் தமிழக போக்குவரத் துத்துறையில் பணியாளர்களை நியமணம் செய்வதற்கு லஞ்சம் வாங்கியது! குற்றம் நடந்தது அதிமுக ஆட்சியில்! வழக்கு தொடுத்தது திமுக ஆட்சியில்! வழக்கு நடந்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் , ஸ்டாலினும் செந்திலும் பேரம் பேசி, செந்தில் ஸ்டாலினின் திமுகவுக்கு தாவிவிட்டார்!
அதிமுக காரர் என்பதால் வழக்கு தொடுத்தார் ஸ்டாலின், இப்போது திமுககாரராக மாறிவிட்டபின், திமுகவின் ஊழல் ஒழிப்புத்துறை எப்படி நடவடிக்கை எடுக்கும்? எடுக்காது! ”நடவடிக்கை எடுக்க மாட்டோம் நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள்” என்பதுதான் ஸ்டாலின் கேட்டுக்கொண்டது என சொல்லப்படுகிறது!
ஆனால், சிவ பூஜையில் கரடி புகுந்துவிட்டது! மத்திய அமலாக்கத்துறை இந்த வழக்கில் புகுந்துவிட்டது! போக்குவரத்துத்துறையில் லஞ்சமாக வாங்கிய பணம் பரிமாற்றத்தில் முறைகேடு இருக்கிறது என சொல்லி மத்திய அமலாக்கத்துறை வந்துவிட்டதால், செந்தில்பாலாஜி ஜெயிலுக்கு போய்விட்டார்!
* பொன்முடியின் வழக்கு தமிழக ஊழல் ஒழிப்புத்துறையிடம் இருப்பதால் அவர் ஜெயிலுக்கு போகாமல் இன்றுவரை 13 தினங்களை தள்ளிவிட்டார்கள்! 29-1-2024 ல் ஜெயில் உறுதி என மீண்டும் தீர்ப்பு சொன்ன பின்பும், ஸ்டாலினும் மற்றவர்களும் கைகளை பிசைந்துக்கொண்டு என்ன திட்டமிடுகிறார்கள் என தெரியவில்லை!
முயலின் பல்பட்டபின்பு முயல் குட்டிகள் தப்பிவிட முடியாது! நீதிமன்றத்திற்குள் நுழைந்துவிட்ட திமுகவின் தலைமை குடும்பம் உட்பட சுல்த்தான் குடும்பங்கள் எதுவும் இனி தப்பிக்க முடியாது!
மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் பணிகளில் மத்திய பாஜக அரசு தலையிடுவதில்லை! என்பதும், மாநில அரசு தனது ஊழல் ஒழிப்புத்துறையில் தலையிடுகிறது! என்பதும் உண்மையாக உள்ளது என்பதை, செந்தில்பாலாஜி கைதும், பொன்முடி கைதில் தாமதமும் நமக்கு உணர்த்துகிறது! எனத் தெரிவித்துள்ளர்.