400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும்! - பிரதமர் மோடி பேச்சு
Mar 15, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

  400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும்! – பிரதமர் மோடி பேச்சு

எப்போதும் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி வரிசைதான்!

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தலில் போட்டியிடும் சக்தியை எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டதாகவும், இனி வெற்றி பெற வாய்ப்பில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸை விமர்சித்துள்ளார்.  காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர முடிவு செய்துள்ளதாகவும், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்றும் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்தார். நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்தார்.

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வருகிற 9ஆம் தேதி   நிறைவடையவுள்ளது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அதன் மீது இரு அவைகளிலும் விவாதம் நடந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பிரதமர் மோடி இன்று மாலை பேசினார்.

அப்போது  உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,

மதத்தின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர் எனக் கூறியும் எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நீண்ட நாள்களாகவே எதிர்க்கட்சி வரிசையிலேயே
உள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் எப்போதுமே இனி எதிர்க்கட்சி வரிசையில்தான்
இருப்பார்கள். ஓர் எதிர்க்கட்சியாகவும் நாட்டு மக்களை  காங்கிரஸ்
திருப்திப்படுத்தவில்லை.

காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமர முடிவு செய்துள்ளதாகவும், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவார்கள் என்றும் எதிர்க்கட்சிகளை அவர் கிண்டல் செய்தார். நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் உறுதியை நான் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடும் சக்தியை எதிர்க்கட்சிகள் இழந்துவிட்டதாகவும், இனி வெற்றி பெற வாய்ப்பில்லை.

நாட்டிற்கு எப்போதுமே ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சி அவசியம் என்று எப்போதுமே
நான் சொல்வதுண்டு. பலருக்கு தேர்தலில் போட்டியிடும் தகுதியே இல்லை.

சில தொகுதிகளில் பல அதிரடி மாற்றங்களை எதிர்க்கட்சி செய்தது. இந்த முறையும்
போட்டியிடும் தொகுதிகள் மாறலாம். மக்களவைக்கு வருவதற்கு பதிலாக பலர்
மாநிலங்களவைக்கு செல்லவே விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளால் நாட்டிற்கே பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மட்டும் 370 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டு வெற்றி
பெறும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டனி 400 தொகுதிகளுக்கு மேல்
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸுக்கு இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சியமைத்து 1000
ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும்.

தேவையான வாய்ப்புகள், தொழிலுக்கான வழிவகையை செய்துகொடுத்தாலே நாட்டில் ஏழ்மை ஒழிந்துவிடும். சாலையோர வியாபாரிகள், கைவினை கலைஞர்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி ஒரே குடும்பத்தை நம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மந்தகரமான
வேகத்துடன் நாங்கள் போட்டியிடுவதில்லை. பாஜக ஆட்சியில் 17 கோடி மக்களுக்கு சமையல் எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களுக்கு 4.8 இணைப்பு கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

நாங்கள் பேசுவது எங்கள் சாதனையைப் பற்றி அல்ல; நாட்டின் வளர்ச்சி மற்றும் சாதனையைப் பற்றி பேசுகிறோம். பாஜக அரசு பெரிய குறிக்கோளுடன் கடுமையாக உழைத்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
குடும்பங்களிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. பாஜக அரசு
ஆட்சி அமைத்தபிறகு 3 கோடி பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்வடைந்துள்ளனர்.
தேசிய ஆலோசனைக் குழுவில் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை பேர் ஓபிசி பிரிவில்
இடம்பெற்றிருந்தனர் எனக் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதாகவும், கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை எனவும் விமர்சித்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் அரசியலுக்கு வரலாம்; ஒரே குடும்பம் ஆட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். ஒருசிலரின் முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறது காங்கிரஸ்.

ஒருசிலரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

எதிர்க்கட்சி கூட்டணியில் ஒருவர்மீது ஒருவருக்கே நம்பிக்கையில்லை. கூட்டணி கட்சிகளுக்கே காங்கிரஸ் தலைமையின் மீது நம்பிக்கையில்லை.
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வியூகம் சிதறிவிட்டது. காங்கிரஸ் கட்சி தனது இறுதிக்கட்டத்தில் உள்ளது என தெரிவித்தார்.

Tags: PM Modinew parliament
ShareTweetSendShare
Previous Post

பாஜக ஆட்சியில், தாய்மொழி உட்பட ஐந்து மொழிகள் கற்றுக் கொள்ள வழி செய்யப்படும்! – அண்ணாமலை

Next Post

இமாச்சல பிரதேசத்தில் கடுமையான பனிப்பொழிவு – முக்கிய சாலைகள் மூடல்!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies