பாஜக ஆட்சியில், தாய்மொழி உட்பட ஐந்து மொழிகள் கற்றுக் கொள்ள வழி செய்யப்படும்! - அண்ணாமலை
Aug 18, 2025, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக ஆட்சியில், தாய்மொழி உட்பட ஐந்து மொழிகள் கற்றுக் கொள்ள வழி செய்யப்படும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Feb 5, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 திமுக, 31 மாதங்கள் முடிவில் வெறும் 10000 பேருக்கு மட்டுமே அரசுப் பணி கொடுத்திருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

ஸ்ரீபுரம் நாராயணி பொற்கோவில், வட தமிழகத்தின் ஸ்ரீரங்கம் என அழைக்கப்படும் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான பள்ளிகொண்டான் ரங்கநாதர் கோவில் ஆகியவை அமைந்திருக்கும் தொகுதி.

அழிந்து போன நாகநதியை, இந்தப் பகுதியின் 21 கிராமப் பொதுமக்கள் கூடி மீட்டெடுத்ததைப் பற்றிப் பெருமையாக நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார். இம்மண்ணின் பெருமையையும், மக்களின் பெருமையையும், இந்தியா முழுவதிற்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

இங்குள்ள இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையை, நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள், கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு நிறைவேற்றினார்.

ஒடுகத்தூர் பகுதியில், 1000 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி நடக்கிறது. நாள் ஒன்றுக்கு 1000 டன் கொய்யாப் பழங்கள், விற்பனைக்குச் செல்கிறது. ஒடுகத்தூர் கொய்யாப்பழத்திற்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையை, நிறைவேற்ற தமிழக பாஜக தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்துசமய அறநிலையத்துறை செயல்பாடுகளை, மாண்புமிகு நீதிமன்றங்களே விமர்சனம் செய்துள்ளன. நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, ‘இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடு திருப்தி இல்லை எனவும், அறநிலைய அதிகாரிகளுக்கு நல்ல சம்பளம் வழங்கினாலும் பணி செய்வதில் மெத்தனமாக உள்ளதாக நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், ‘தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் கொடுத்துப் பாருங்கள் தமிழ்நாடு கோவில்களில் ஏற்படும் மாற்றங்களை ஒரு மாதத்தில் பார்க்க முடியும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம், ‘கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கடுமையாக விமர்சித்தது  நீதிமன்றம்.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அதிகாரிகள் கடமையைச் செய்யாமல் சம்பளம் வாங்குவதில் என்ன பயன் என்று நேரடியாகவே அரசிடம் கேள்வி கேட்டது நீதிமன்றம். இந்து சமய அறநிலையத்துறை அறம் இல்லாத துறை. அரசு நியமித்த கொள்ளையர்கள்.

திமுக ஆட்சியில் சிறப்பாக நடைபெறுவது மணல் கொள்ளை மட்டும்தான் என்பது ஊரறிந்த உண்மை. ஆட்சியில் இருக்கும் திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பங்காளிக் கட்சி, சமீபத்தில் அணைக்கட்டில் மணல் கொள்ளை சம்மந்தமாக போராட்டம் நடத்தினார்கள்.

உடனே, திமுக, அவர்கள் மீது அணைக்கட்டு ஒன்றியம் கரடிகுடி ஊராட்சியில் கடந்த ஆட்சியில், சட்ட விரோதமாக கல் குவாரியில் கிராவல் மண், மண் கடத்தல் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோயில் இடத்திலும் பல கோடி ரூபாய்க்கு கிராவல் மண் கற்களை திருடி விற்பனை செய்ததால் 200 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என எதிர் குற்றசாட்டு வைத்தது.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது. இவர்கள் அவர்களை குற்றம் சொல்வார்கள். அவர்கள் இவர்களை குற்றம் சொல்வார்கள். இயற்கை வளங்களை சுரண்டி சுரண்டி கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தின் பாதி பகுதிகளை வறண்ட பூமியாக மாற்றியதே பங்காளிகளின் சாதனை. இவர்கள் இருவரும் பங்காளிக் கட்சி. நான் பகையாளியாம். மக்களுக்காக குரல் கொடுப்பதால் என்னை பகையாளி என்று அழைக்கிறார்கள். அதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 35 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் அரசுப் பணிக்கான தேர்வு எழுதி, காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐந்து ஆண்டுகளில் மூன்றரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை என்று வாக்குறுதி கொடுத்த திமுக, 31 மாதங்கள் முடிவில் வெறும் 10000 பேருக்கு மட்டுமே அரசுப் பணி கொடுத்திருக்கிறது.

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, தங்கள் தலைமுறையில் இதுவரை யாரும் அரசுப் பணியில் சேர வாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். உலகத் தரம் வாய்ந்த அரசுப் பள்ளிகள் தமிழகத்தில் உருவாக்கப்படும் அந்தப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தாய்மொழி உட்பட ஐந்து மொழிகள் கற்றுக் கொள்ள வழி செய்யப்படும். தமிழகத்தில் வளர்ச்சியைக் கொண்டு வரவேண்டியது பாஜகவின் கடமை. தமிழக அரசியலில் அழுக்குகளை அகற்ற, தமிழகம் முழுவதும் தாமரை மலர வேண்டும்.

அதன் முதல்படியாக, வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, இம்முறை தமிழகமும் துணை நிற்க வேண்டும். நம் குழந்தைகள் எதிர்காலத்துக்காக, ஊழல் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjpk annamalaien mann en makkal rally
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பனிச்சரிவு அபாயம்!

Next Post

  400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லும்! – பிரதமர் மோடி பேச்சு

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies