நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை, காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவருக்கு வழங்கியதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் காங்கிரஸ் மாஜி தலைவர் ராகுல் காந்தியின் பாரத் சோடோ யாத்திரை நடைபெற்றது. அப்போது, நாய் சாப்பிட மறுத்த பின்கட்டைக் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ஒருவருக்கு ராகுல் காந்தி வழங்கினார். இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வரலாகி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா, கடந்த சில நாட்களுக்கு முன்பு, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே, காங்கிரஸ் கட்சியின் முகவர்களை நாய்களுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்போது, அகில இந்திய காங்கிரஸ் மாஜி தலைவர் ராகுல் காந்தி, நாய் ஒன்றுக்கு பிஸ்கட் கொடுத்தார். ஆனால், அந்த நாய் அந்த பிஸ்கட்டை சாப்பிட முன்வரவில்லை. இதனால், அந்த பிஸ்கட்டை தனது கட்சி தொண்டர் ஒருவருக்கு கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் மாஜி தலைவரும், பட்டத்து இளவரசருமான ராகுல் காந்தி, தனது கட்சி தொண்டர்களை நாய்களைப் போல நடத்தினால், காங்கிரஸ் கட்சி விரைவில் காணாமல் போவதைத் தவிர்க்க முடியாது எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், மற்றொரு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான பல்லவி சி.டி அதே காணொளியை ட்வீட் செய்துள்ளார். அதில், தற்போதைய அசாம் முதல்வராக உள்ள சமந்தா பிஸ்வா சர்மாவை, ராகுல் காந்தி இதே போல் அவமரியாதை செய்தார். இதுதான் அவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுக்குக் கொடுக்கும் மரியாதையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த சம்பவம் முற்றிலும் உண்மை என்பதை அசாம் மாநில முதல்வர் சமந்தா பிஸ்வா சர்மா தெளிவு படுத்தியுள்ளார்.
ஒரு முறை ராஜீவ் காந்தியின் வீட்டிற்கு நான் சென்றேன். அப்போது, அங்கு நாய்-க்கு என்று வைக்கப்பட்டு இருந்த பிஸ்கட் தட்டுகளில் இருந்து பிஸ்கட் எடுத்து எனக்கு ராஜீவ் காந்தி கொடுத்தார். இதை நான் கண்ணால் பார்த்த பிறகு சாப்பிட மனம் வரவில்லை. காரணம், நான் ஒரு இந்தியன். அதுமட்டுமல்ல, ராஜீவ் காந்தி குடும்பத்திற்குப் பாடம் புகட்டவே காங்கிரஸில் இருந்து நான் ராஜினாமா செய்தேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
ஆகமொத்தம், காங்கிரஸ் கட்சி தொண்டர்களை நாயைவிடக் கேவலமாக நினைத்து ராஜீவ் காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இணைந்து செயல்பட்டது தற்போது ஆதரத்துடன் அம்பலத்திற்கு வந்துள்ளது.