ஜூராசிக் பட வரிசையில் ஜூராசிக் வேர்ல்ட் 4 ஆவது பாகத்தை அடுத்த ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1993 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் தான் ஜூராசிக் பார்க். இந்த படம் திரையரங்குகளில் அன்றைய குழந்தைகளை அலறவைத்து திகிலூட்டிய இத்திரைப்படம்.
மேலும் இந்த திரைப்பட அறிவியலை மிகத் தெளிவாகவும் அழகாகவும் அனைவருக்கும் எடுத்துரைத்தது.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன் பூமியில் வாழ்ந்து அழிந்துபோன டைனோசர்களை மீண்டும் எதார்த்த வாழ்க்கையில் வைத்து பார்க்கும் ஒரு முயற்சியாக இந்தப் படம் அமைந்தது.
இதுவரை ஜுராசிக் பார்க் பட வரிசையில் இதுவரை 3 பாகங்கள் வெளியாகியுள்ளன அதேபோல் ஜுராசில் வேர்ல்ட் பட வரிசையில் இரண்டு படங்கள் வெளியாகி இருக்கின்றன.
தற்போது ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமாக யுனிவர்ஸல் பிக்சர்ஸ் ஜூராசிக் வேர்ல்ட் 4 ஆவது பாகத்தை அடுத்த ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஜூராசிக் பார்க் படவரிசையின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. மேலும் இதுவரை வெளியான படங்களை விட முற்றிலும் புதிய ஒரு கதையமைப்பு இந்தப் படத்திற்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹாலிவுட் இயக்குநர் டேவில் லீச் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இவர் புல்லட் ட்ரெயின் என்கிற புகழ்பெற்ற படத்தை முன்னதாக இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கான திரைக்கதையை ஜூராசிக் பார்க் முதல் பாகத்திற்கு திரைக்கதை எழுதிய டேவிட் கோப் இந்தப் படத்திற்கு திரைக்கதை அமைக்கிறார். ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இந்தப் படத்தை ஃபிராங்க் மார்ஷல் மற்றும் பேட்ரிக் குரோலி ஆகியவர்களுடன் இணைந்து தயாரிக்க உள்ளார்.