இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இ
ந்நிலையில், இங்கிலாந்து மன்னர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரசு குடும்பம் வெளியிட்டிருந்த பதிவுக்கு பதிலளித்து பிரதமர் மோடி, தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவாக குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க விரும்பும் இந்திய மக்களுடன் நானும் இணைகிறேன்” என்று கூறினார்.
I join the people of India in wishing speedy recovery and good health to His Majesty King Charles III. https://t.co/86mKg9lE1q
— Narendra Modi (@narendramodi) February 6, 2024